அன்பானவர்களே! மிகவும் இக்கட்டான தருணத்தில் நாமிருக்கிறோம்.

அன்பானவர்களே!

மிகவும் இக்கட்டான தருணத்தில் நாமிருக்கிறோம். நாம் எல்லோரும் இதனை பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நமது ஒத்துழைப்பு, நமது ஒற்றுமை,  நமது ஒழுக்கம், நமது மனிதாபிமானம், அத்தோடு நமது பிரார்த்தனை!
இவைதான்  எம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி!

 நமது உயிர்களை பாதுகாப்பதற்காகத்தான் 'தனிமைப்படுத்திக்
கொள்ளுமாறும்,ஒதுங்கியிருக்குமாறும்'  நாம் கேட்கப்படுகிறோம்.  நமது உயிர்களை  பாதுகாப்பதற்காகத்தான் 'அவர்கள்' தமது உயிரை பணயம் வைத்து களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைத்தியர்கள்; தாதிகள்; மருத்துவ உதவியாளர்கள்; சுகாதாரத்துறையினர், பாதுகாப்புத் துறையினர் என  பலரும் நமக்காக இரவு பகலாக களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமது  உயிரை பணயம் வைத்து நமக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மிடம் 'அவர்கள்' கேட்பதெல்லாம் சில நாட்களுக்கு "ஒதுங்கி இருங்கள்,உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்"
என்பது மாத்திரமே.

இந்த  அபாயத்திலிருந்து நம்மையும் நமது உறவுகளையும் பாதுகாத்துக் கொள்ள இதைக் கூட நம்மால் செய்ய முடியாதா?

ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. ஆரம்பத்தில் 'இது' பற்றி கவனத்தில் கொள்ளாதவர்கள்தான்  இன்று கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
இத்தாலி இதற்கு ஒரு நல்ல உதாரணம்! 

எனவே,
ஒதுங்கி இருப்போம்! ஒத்துழைப்பு வழங்குவோம்!ஒழுக்கமாக நமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!!!

அத்தோடு,
கவலை களைவோம்!
மன உறுதி கொள்வோம்!! மகிழ்ச்சியான மனோநிலையினை பேணுவோம்!!!

அதன் மூலமே, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்த முடியும்.

அதுபோலவே, மனிதாபிமானமும்
சகோதரத்துவமும் பேணுவோம்! நம்மைச் சூழவுள்ளவர்களின் நிலைமைகளையும் கவனத்தில் கொள்வோம்!!
அவர்களும் கஷ்டங்களின்றி அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக இந்தக் காலத்தை கடந்து செல்வதற்கு நம்மாலான அனைத்தையும் செய்வோம்!!!

ஊரடங்குகள் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் பொறுப்போடும், அறிவுபூர்வமாகவும் ,
மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்வோம்!
நாட்டின் சட்டத்தை மதித்து நடப்போம்!!பாதுகாப்புத்தரப்பினருக்கும் போதிய ஒத்துழைப்பை நல்குவோம்!!!

இறுதியாக,
இந்தப் பேரபாயம் நமது மண்ணை விட்டும்,
இந்த நாட்டை விட்டு்ம், இந்த உலகைவிட்டும் முற்றாகவும்  விரைவாகவும் நீங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்திப்போம்! வணக்க வழிபாடுகளையும், பாவமன்னிப்பினையும் அதிகப்படுத்துவோம்.

இதுவே,  இக்கட்டான இத்தருணத்தில்  நமக்காகவும் மனித சமுதாயத்துக்காகவும்  நம்மால் செய்யக்கூடிய உயர்ந்த பங்களிப்பாகும்!

-பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்-

No comments