மஞ்சந்தொடுவாய் அமீர்அலி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்

மஞ்சந்தொடுவாய் மட்/அமீர் அலி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 07.03.2020 சனிக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் அல்ஹாஜ்.AM.அப்துர் ரஹ்மான் BA/JP தலைமையில் பூனச்சிமுனை இக்ரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.


நிகழ்வின் விசேட அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹக்கீம் SLEAS, காத்தான்குடி முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் MACM. பதுர்தீன் JP, அல்ஹாஜ் ML. அலாவுதீன் ISA, AM.றபீக் Retair ISA, உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், , ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் போது  மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய துடன், இறுதி நிகழ்வான மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈட்டியதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிகளால் பரிசில்கள், வெற்றிச் சாண்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.No comments