கொரோனா நோய் கிருமி தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு ஒழிப்பு விசேட செயலணி


கொரோனா நோய் கிருமி தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய அறிவியல் பூர்வமான முறைமைகளைக் கண்டறிந்து பின்பற்றுமாறு கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக பிராந்தியத்தில் கொரோனா கிருமித் தொற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடாக இலங்கை உள்ளது” என்றும் தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கண்டறியுமாறும் கடந்த 6ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நான் தெரிவித்தேன்.


ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது என்பதால், அந்நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களை 14 நாட்களுக்கு நோய்த்தொற்று தடைகாப்பு செய்ய வேண்டுமென்று செயலணி பரிந்துரை செய்துள்ளதுடன், இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயமற்ற நாடாக இலங்கையைத் தொடர்ந்தும் வைத்திருக்க முடியுமென்றும் செயலணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

“தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் வெற்றிகரமாக நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் நாட்டிற்குள் கண்டறியப்படவில்லை. அதனால், வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்களும் தமக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால், அதனை மறைத்துக்கொண்டிருக்காது - சமூகப் பொறுப்புடன் - செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்று நான் தெரிவித்தேன்.

“நோய் தொற்றுவதைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களின் வாயிலாக தொடர்ச்சியாக அறிவிறுத்தல்கள் செய்ய வேண்டியதும் அவசியமானது” என்று நான் சுட்டிக்காட்டியதுடன்,

“எதிர்காலத்தில் நோய்த்தொற்றுத் தடைகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தால் அதற்குத் தேவையான இடங்கள், வளவாளர்கள், வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்ற பணிப்புரையையும் விடுத்தேன்.

No comments