நிவாரணப்பணிகளை சம்மேளனம் அவசரமாக ஒருமுகப்படுத்தினால் தேவையுடையவர்கள் அனைவரும் நண்மையடைவர்


சிரேஷ்ட சட்டத்தரணி 
MIM அஸ்வர்

தற்போதய இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய கிராமங்களுக்கும், தேவையுடையவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு முன்னாள் ஆளுனர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ரூபாய் 50 இலட்சம் நிதி உதவியை காத்தான்குடி சம்மேளனத்திற்கு வாங்கியிருப்பதை மனதாற பாராட்டுகின்றேன். 

அதேநேரத்தில் காத்தான்குடியில் செயற்படும் பல்வேறு தொண்டர் நிறுவனங்கள், சமூக வலைய குழுமங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் என பல தரப்பினர் நிவாரணப் பணிகளில் இறங்கி மும்முறமாக செயற்படுவதை இந்த இடத்தில் பாராட்டலுடன் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

இருப்பினும் எமதூர் மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் இருக்கும் உண்மையாக தேவையுடையவர்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

நிவாரணப்பணிகள் ஒருமுகப்  படுத்தப்படாமல் பலதரப்பாலும் மேற்கொள்ளப்படும் போது தேவையுடைய ஒரு குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட உதவிகளை பெறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கும் அதே நேரத்தில் உண்மையாக உதவி கிடைக்க வேண்டிய பல குடும்பங்கள் உதவிகள் கிடைக்கப்பெறாமல் விடுபட வாய்ப்புகள் இருப்பதை தாழ்மையாக அனைவருக்கும் சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்.

இத்தருணத்தில் எமதூரில் நிவாரணப் பணிகளில் செயற்படும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சம்மேளனத்திற்கு கிடைத்திருக்கும் ரூபாய் 50 இலட்சம் மற்றும் சம்மேளனத்தினால் இந்நிவாரணப் பணிக்கு சேகரித்து இருக்கும் நிதி அத்தோடு ஏற்கனவே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தரப்பானரும் தங்களது நிதிகளை ஒன்றினைத்து ஒருமுகப்படுத்தப்பட்ட முறையில் நிவாரணப் பணியை முன்னெடுப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பது எனது ஆலோசனையாகும். 

அத்தோடு உண்மையாக உதவி கிடைக்க வேண்டிய குடும்பங்கள் இதன் முழுமையான பலனை பெறுவதற்கும் இது வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கும்.

அத்தோடு பொறியியலாளர் MM அப்துர் ரகுமான் அவர்கள் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஆலோசனைகளையும் உள்வாங்கி சம்மேளனம் அவசரமாக விஷேட நிவாரண குழு ஒன்றை அமைத்து இப்பணியை வெற்றிகரமாக செயற்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் 
அருழும், ஆழுமையும் தந்தருள்வானாக!
ஆமீன்.

No comments