கட்சி தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கட்சி தலைவர்களின் கூட்டம் தற்போது அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது. 

விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்திற்காக கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு பதிலளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விஜித ஹெரத், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்,  தமிழ் தேசிய  கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஏ. சுமந்திரன், ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானானந்தா, அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.lnw

No comments