காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டினில் சாதனையாளர் பாராட்டு விழா


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையினால் வருடாந்தம் இடம்பெறும் சாதனையாளர் பாராட்டு விழா இன்ஷா அல்லாஹ் இம் மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் இடம் பெறவிருக்கிறது. 

இந்நிகழ்வில் 2016 | 2017 | 2018 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்து தேசிய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவித்து பாராட்டுவதுடன் நமது பிரதேசத்தில் சமூக, சமய , இலக்கிய மற்றும் பொருளாதார துறைகளில் நீண்ட காலம் பங்களிப்புச் செய்தவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட விருக்கின்றனர். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் PM. அம்ஸா அவர்களும் கௌரவ அதிதிகளாக இலங்கை நிர்வாக சேவை துறையில் நமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர்களும் தினைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். எனவே விருதுகளை பெற்றுக் கொள்வதற்காக மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி
அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். ஸபீல் நளீமி (செயலாளர்)
ப.மு.நி சம்மேளனம்.

No comments