பொதுத் தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழு தயார் நிலையில். வைரஸால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தால் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் பொதுத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் வைரஸால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தால் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது ஏனைய நாட்களை போல ஆதரவாளர்களை ஒன்றிணைத்துக்கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருபவர்கள் கூடியது ஒரு கட்சியைச் சேர்ந்த நான்கு நபர்கள் மட்டுமே வருகை தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார நிலைமைகளுக்கு ஆபத்து இருக்குமாயின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்பு பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும்.lnw

No comments