காத்தான்குடி பிரதேச கல்வி அதிகாரி காத்தான்குடி மீடியா போரத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


ஊடகவியலாளர் 
ஏ.எல்.டீன் பைரூஸ்.

காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய பிரதேச கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள எம்.எம்.கலாவுதீன் BA (SLPS I)
காத்தான்குடி மீடியா போரத்தினால்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 
மேற்படி நிகழ்வு பிரதேச கல்விப் பணிமனை  தற்காலிகமாக இயங்கும் காத்தான்குடி (Teaching Center)
ஆசிரிய வள நிலையத்தில் இன்று (12.03.2020 வியாழன்) இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் ஜே.பி, முன்னாள் தலைவர் மெளலவி SMM. முஸ்தபா (பலாஹி) செயலாளர் எம்.ரீ.எம்.யூனுஸ், பொருளாலர் SAK.பழீலுர் றஹ்மான் உட்பட போரத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இங்கு உரையாற்றிய காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன்  காத்தான்குடி புதிய பிரதேச கல்வி அதிகாரி MM. கலாவுதீன் அவர்கற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நானும், எமது மீடியா போரமும் எந்த வேளையிலும் உதவ தயாராக இருப்பதோடு பிரதேசத்தின் கல்வி நடவடிக்கையில் எமது போரம் மிக கூடுதல் அக்கறை செலுத்தவுள்ளதாகவும்  பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இப்பணியினை மிகவும் திறன்பட செய்யும் புதிய கோட்டக்  கல்வி அதிகாரி  MM.கலாவுதீன் BA  அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இதன் போது தெரிவித்தார். 


அதனைத் தொடர்ந்து 
காத்தான்குடி பிரதேச கல்விப் பனிமனையின் புதிய பிரதேச கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் BA உரையாற்றிய  போது
பல வேளைப் பழுக்களுக்கு மத்தியிலும் எனது காரியாலயத்திற்கு வந்து என்னை கெளரவித்த காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும்  தனது நன்றியினை தெரிவித்துக கொள்வதாக இதன் போது தெரிவித்தார்.No comments