முன்பு திட்டமிட்டபடி ஏப்ரல் 25 பொது தேர்தல் - ஜனாதிபதி

முன்பு திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 நடைபெறும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு தெற்காசிய பிராந்திய தலைவர்களுக்கிடையே நேற்று (15) நடைபெற்ற வீடியோ மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“Covid -19 அல்லது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் சார்க் தலைவர்களின் முயற்சி உலகிற்கு முன்னூதாரணம்” (SAARC Leaders on Combating COVID- 19, Settling an Example to the World)  என்ற கருப்பொருளில் இந்த விசேட அரச தலைவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு அமையவே.

பிராந்திய தலைவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் அவர்கள் முகங்கொடுத்த சவால்கள் பற்றி தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததன் மூலம் கொரோனா தொற்றினை வெற்றிகொள்வதற்கு இயலுமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய பொறிமுறையொன்றை உருவாக்கி வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் முறையாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் பொதுத்தேர்தல் திட்டமிட்ட வகையில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments