அனைவரினதும் பாராட்டினைப் பெற்ற மட்/தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி. 2020

ஊடகவியலாளர் 
ஏ.எல்.டீன் பைரூஸ்  


காத்தான்குடி மட்/தாருஸ் ஸலாம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி
வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். முனீர் அஹமட் தலைமையில் பாடசாலை வளாகத்தில் (28.02.2020 வெள்ளிக்கிழமை) இடம் பெற்றது.


இப்பாடசாலையின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி இது என்பதனால் நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த அதிதிகள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள்  என அனைவரும் கலந்து கொண்டதனை காணமுடிந்தது. இதற்கு  பிரதானமாக அமைந்த சில காரணங்களைக் குறிப்பிடலாம்.


இப்பாடசலையானது 2017ம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும்.
இப்பாடசாலையில் மொத்தமாக 74 மாணவர்களும் 4 ஆசிரியர்களுமே உள்ளனர்.


இவ்வாறான சூழ்நிலையில் இப்பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், குறிப்பாக பெற்றோர்களின் 100% பங்களிப்புடன்  நிகழ்வுகள் யாவும் ஒரு பெரிய பாடசாலையைப் போன்று ஏற்பாடு செய்திருந்மையே
ஆகும்.   


மேலும்.........

இப்பாடசாலையில் மைதானம் இல்லாத போதும் கூட மாணவர்களின் நிகழ்வுகள் யாவும் விசேடமாக  தரை அமைக்கப்பட்டு இடம் பெற்றமையாகும்.பொருளாதார வசதிகள் குறைவாக இருந்தும் நிகழ்வினை அதிபர் உட்பட ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக நடாத்தியமையாகும்.விளையாட்டுப் போட்டி பற்றிய விளம்பரம் வெள்ளைத் துணியில் மாக்கர் பேனாவினால் எழுதப்பட்டு வீதியில் காட்சிப்படுத்தி இருந்தமையாகும்.


போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை பெற்றோர் முதல் அயலவர்கள் என அனைவரும்  இரவு பகலாக பணியில் ஈடுபட்டிருந்தமையாகும்.
இவ்வாறு இன்னும் பல  எமது விசேட அவதானங்களை குறிப்பிட முடியும்.   


குறிப்பாக அப்பிரதேச வரலாற்றில் முதன் முதலாக நடைபெற்ற இவ்விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றதனை அவதானிக்க முடிந்தது.


நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.SMMS.உமர்மெளலானா, நிருவாக உத்தியோகஸ்தர் CM.ஆதம்லெப்பை, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம், MLM.முதர்ரிஸ்.ADE, காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான 
AM.பெளமி,MACM.ஜவாஹிர், AL.அலிஅக்பர்,AL.பஜ்ரியா,
AMS.றிபாயா,Mrs.மசூத் உட்பட பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,நலம் விரும்பிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு அதிதிகளினால் பதக்கம் அணிவித்து சாண்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்த்த்தது.


No comments