தாபல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் 09ம் திகதி முதல் பொறுப்பேற்பு

பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி மார்ச் மாதம் 09ம் திகதி முதல் 16ம் திகதி வரை ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தபால்  வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

2019 தேர்தல் பதிவேட்டின் படி, இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறுவதுடன், மார்ச் 12ம் திகதி முதல் 19ம் திகதி வரை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும்.

பொதுத்தேர்தலில் பின் மே மாதம் 14ம் திகதி முதல் பாராளுமன்றம் கூடும். lnw

No comments