மற்றொருவர் மீது தவறான முறையில் "அவதூறு" Defamation பரப்புவது சட்டரீதியாக குற்றச்செயலா?

ஏ.ஆர்.மபூஸ்அஹமட்
LLB(Hons)

ஒருவர் மீது மற்றொருவர் தவறான முறையில் அவதூறு சொல்லுவது என்பது சாதாரண வாழ்க்கையில் அன்றாடம் கானக்கூடிய விடயமாகும். வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது சுமத்துவது, அது தொடர்பில் விமர்சனம் செய்வது போன்ற விடயங்களை நாம் கண்டுள்ளோம்.

இருப்பினும் "அவதூறு" என்பது சாதாரண மனிதர்கள் விடயத்தில் பாரிய பிரச்சினை களை  தோற்றுவிக்கும் ஒன்றாக இருக்காது. ஆயினும் அரசியல் வாதிகள், சினிமா துறையினர், செல்வந்தர்கள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற சமூகத்தில் நன்மதிப்புடன் வாழ்பவர் மத்தியில் அவதூறு என்பது பாரிய பிரச்சினை களை தோற்றுவிக்கும் ஒரு விடயமாகும். 

அண்மையில் முன்னால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தி இருந்தார். அது ஒரு அவதூறான குற்றச்சாட்டு என்று அதற்கெதிராக முன்னால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் விமல் வீரவங்ச தன்மீது அரசியல் காரணங்களுக்காக போய்யான குற்றச்சாட்டுக்களை தன்மீது சேரு பூசுவதற்காக அவதூறான முற்றிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக அவர்மீது வழக்கு தொடர முன்னர் " கோரிக்கை கடிதத்தினை அனுப்பி உள்ளதாக ஊடகங்களில் தெரிவித்தார்.  

எனவே இந்த விடயம் தொடர்பாக  சட்டம் கூறும் சில விடயங்களை முகநூல் வாசகர்களுக்கு தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்..

சட்டத்தில் இவ் அவதூறு  குற்றச்சாட்டு தீங்கியல் " law of Delict ( Tort) சட்டத்தினால் கையாளப்படுகிறது. இங்கு அவதூறு சொல்லுவது ஒரு தீங்கியல் குற்றமாகும். சிவில் நடைமுறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. தீங்கியலில்  அவதூருசட்டம் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு பாதுகாப்பினை வழங்குகிறது. 

மூன்றாம் நபர் ஒரு வரால் எந்த விதமான அடிப்படை ஆதாரங்களுமின்றி பொய்யாக பிரபலம் ஒருவரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் அவதூரொன்றுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுப்பதற்கு (law of defamation) அவதூறு சட்டம் வழிவகுக்கிறது.

இங்கு அவதூறு சட்டமானது சிவில் நடைமுறையின் கீழ் பாதிக்கப்பட்ட நபருக்கான நீதியினை பெற்றுக்கொடுக்கும். இங்கு அவதூறு என்பது வெறும் வாய் வார்த்தைகள் மாத்திரம் இன்றி பத்திரிகை செய்திகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் கூட அவதூறு அடையாளப்படுத்தப்படுகிறது.

Roman Dutch law இல் இருந்தே அவதூறு சட்டம் தோற்றம் பெற்றது. 

ஒரு அவதூறு குற்றச்சாட்டு வழக்கில் முகத்தோற்றத்தில் prima facia வில் எதிராளியினால் கூறப்பட்ட அல்லது எழுதப்பட்ட அவதூறு சொல்லானது மனுதாரரை நேரடியாக குறிப்பிட்டு நிற்பதோடு அது மனுதாரருக்கு பாதிப்பை உண்டாக்குவதாக அமைந்தால் மாத்திரமே நீதிமன்றம் வழக்கை தொடர அனுமதிக்கும். 

இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகள், கேளிச்சித்திரங்கள், பட்டப்பெயர்கள் என்பன நேரடியாக வழக்காளியை பாதிப்பதாக அமையாது.  

Wikramanayaka vs The Times of Ceylon Ltd எனும் வழக்கில் எதிராளியினால் பயன்படுத்தப்பட்ட கூற்றானது மனுதாரரை நேரடியாக சுட்டி நிற்க வில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

அவதூறு வழக்கொன்றில் மனுதாரருக்கு எதிராளியின் அவதூறுக் கூற்றால் ஏற்பட்ட சொத்துமுறை இழப்பு "pecuniary loss" தொடர்பாக கவனம் சொலுத்துவதோடு பின்வரும் அத்தியாவசியமான விடயங்கள் தொடர்பாக நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும். 
01. எதிராளியினால் கூறப்பட்ட கூற்றில் அவதூறான வசனம் கட்டாயம் கானப்பட வேண்டும். 

02. அவ்வாறான வசனம் நேரடியாக மனுதாரரை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். 

03. மனுதாரரை பொறுத்த வரையில் அது தவறான செய்தியாக இருத்தல் வேண்டும். 

04. அது மனுதாரரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். 

எனவே மேற்சொன்ன விடயங்கள் அவதூறு வழக்கொன்றில் மிகமுக்கியமாக நீதிமன்றத்தினால் கவனத்தில் கொள்ளப்படும் விடயங்களாகும்.

அவதூறு சட்டம் தீங்கியலில் ஒரு பரந்த விடயமாகும் இருப்பினும் மேலோட்டமாக அறிந்திருப்பதற்காக சில முக்கிய விடயங்களை மாத்திரம் பதிவிட்டுள்ளேன்..

இனி சில சுவாரஸ்யமான தகவல்களை தருகிறேன்..

# 2002ம் ஆண்டுக்கு முன்னர் defamation அவதூறு இலங்கை சட்டத்தில் ஒரு கிரிமினல் சட்டமாகும். Penal code இல் இரண்டு வருட கடூளிய சிறைத்தண்டனை பெறும் குற்றமாக இருந்தது.  பின்னர் முன்னாள் பிரதமர்  ரனில் விக்ரமசிங்க வின் ஆட்சிக்காலத்தில் இச்சட்டம் நீக்கப்பட்டது. 

தெற்காசியாவிலேயே அவதூறு கிரிமினல் குற்றமாக அங்கீகரித்த முதலாவது நாடாக இலங்கை இருந்தது.

# 2010 ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயவாளராக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களினால் Sunday Leader பத்திரிகைக்கு எதிராக 2billion ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது.

இன்று சாதாரணமாக அவதூறு என்பது சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுகிறது. பலர் பல குற்றச்சாட்டுகளுக்கு பொய்யான வகையில் உள்ளாகின்றனர். ஆதாரமற்ற அடிப்படை அற்ற வகையில் பரப்பப்படும் செய்திகள் கண்டிக்கப்பட வேண்டியவை.  இவ்வாறான அவதூறு கூறுவதை எந்த மாரக்கமும் அனுமதிக்க வில்லை.  குறிப்பாக இஸ்லாம் அவதூறு பரப்புவது குற்றச்செயல் என வண்மையாக கண்டிக்கிறது.  எனவே நாம் இதுதொடர்பில் கவனமாக இருப்போம்.

மூலாதாரங்கள்:

1. The Law of Delict (Tort) - Dr. U.L. Abdul majeed. 

2.http://www.lawlanka.com/lal/viewcaseSubjecPage?menuValue=lawReport&alphabetValue=I&selectedPage=1

3.https://roar.media/english/life/reports/freedom-of-speech-and-defamation-in-sri-lanka-where-to-draw-the-line/

4.Wikramanayaka vs. The Times of Ceylon Ltd 39 NLR.547

No comments