ஏறாவூர் ஆற்றங்ரை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான வரலாற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்

(ஏறாவூர் நஸீர்)

ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கிழக்கு மாகானம்
ஏறாவூர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசலை, பழைமை நீக்காது புனர் நிர்மானம் செய்து உதவிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் (28.02.2020 வெள்ளிக்கிழமை) இன்று ஏறாவூர் ஆற்றங்ரை ஜும்ஆ பள்ளிவாயலுக்கான  வரலாற்றுச் சான்றிதழை  நிருவாகத்தினரிடம் கையளித்தார்.


இலங்கை வரலாற்றில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் பழமை பேசும் ஒரேயொரு பள்ளிவாயலாக ஏறாவூர் ஆற்றங்ரை ஜும்ஆ பள்ளிவாயல் தான் என  தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களமே சிபார்சு செய்திருக்கிறது.


இதற்கான வர்த்தமானியை இன்று  (28.02.2020 வெள்ளிக்கிழமை)
ஜும்ஆ தொழுகையின் பின்னர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் கையளித்தார்.


இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் M. பாசித், நிருவாக சபை உறுப்பிைர்கள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.


அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.








No comments