கோறளைப்பற்று மேற்கு பிரதேச வாழ் இளைஞர் யுவதிகளே... யார் இந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அஸீம் ?


கோறளைப்பற்று மேற்கு பிரதேச வாழ் இளைஞர் யுவதிகளே... யார் இந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அஸீம் ?

மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை கிராமத்தில் பிறந்து காவத்தமுனை கிராமத்தில் வசிக்கும் இவர் ஆரம்ப கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை ஒட்டமாவடி மத்திய கல்லூரியிலும் கற்று எமது பிரதேசம் முழுவதும் நன்பர்களையும் உறவினர்களையும் கொண்ட ஒருத்தர். 

2013ஆம் ஆண்டிலிருந்து காவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தில் அங்கத்துவம் பெற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் தலைவராகவும், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தில் உப தலைவராகவும் கடமையாற்றி எமது பிரதேச இளைஞர்களை சிறப்பாக வழிநடாத்தி பிரதேச வாதம் இல்லாமல் அனைத்து இளைஞர்களையும் உள்வாங்கி பிரதேசத்தில் இளைஞர்கள் திறன் அபிவிருத்தி நிகழ்வுகள் பல்வேறுபட்டவற்றை தலைமைதாங்கி நடாத்தியுள்ளார். 

இதற்கப்பால் Green Era என்ற அமைப்பினை உருவாக்கி எமது பிரதேசத்தில் சுவர் ஓவியங்களை வரைந்து எமது பிரதேசத்தை அழகுபடுத்தியவர். 

அது மாத்திரமில்லாது School Of Batticaloa Model United Nations எனும் நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக Model United Nation எனும் நிகழ்வினூடாக எமது பிரதேச இளைஞர்கள் ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகள் அதன் நடைமுறைகளை பற்றி அறிவதற்கு வித்திட்டு வழிநடாத்தியவர். 

இதற்கு மேலாக இவரைப் பற்றி சொல்வதற்கு பக்கபலமான அரசியல் குடும்பமோ அல்லது செல்வாக்கான குடும்பமோ இல்லை அவரது நடத்தைகள், சிறந்த பழக்க வழக்கங்கள், சிறந்த பண்பாடுகள், மற்றவர்களை மதிக்கும் தன்மை மற்றும் மற்றவர்களுடன் காட்டும் அன்பு போன்றவற்றையே இவருக்கான பின்னனியாக கூறலாம். 

இவ்வாறு எமது பிரதேச இளைஞர்களின் அபிவிருத்தி தொடர்பில் சிந்தித்து செயற்பட்ட ஒருத்தர் இன்று இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் கழமிறங்கி உங்களின் ஆதரவினை எதிர்பார்க்கின்றார்.

குறித்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலானது ஒரு வருடத்திற்கு ஒரு முறை நடாத்தப்படும் ஒரு தேர்தலாகும்.

அஸீம் அவர்கள் எமது சமூகத்திற்கு செய்த சேவைக்காக அவருக்கான ஒரு கௌரவமாக இந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பளிப்போம். 

எனவே தயவுசெய்து உங்களது பெயர் விபரங்களை கீழ் கானும் லிங்கினை அழுத்தி பதிவுசெய்து எதிர்வரும் 22.02.2020ஆம் திகதி சனிக்கிழமை ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தந்து உங்களது மேலான வாக்கினை அவருக்காக அளித்து அவரை வெற்றிபெறச் செய்யுங்கள். 

நிருவாகம் 
அல்-அஸார் விளையாட்டுக் கழகம், காவத்தமுனை.

https://vote.nysc.lk/#/   
Submit Pls☝

No comments