மைத்திரிக்கு வேட்புமனு வழங்கினால் ஈஸ்டர் தாக்குதல் எமது தோலில் - மொட்டில் கடும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு மொட்டு சின்னத்தின் கீழ் எக்காரணம் கொண்டும் வேட்புமனு வழங்கக்கூடாது என கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் சிலர் தமது கட்சி தலைமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு ஒருவருடம் பூர்த்தியாகும் நேரத்தில் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளதால் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைவது தற்கொலைசெய்வதை போல காரியமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு கடந்த ஜனாதிபதி தேர்தல் ஐக்கிய  தேசிய கட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை பெறுவதற்காக பயன்படுத்தியது இந்த பெறுமதியான வெளியிடப்பட்ட தகவலுக்கு அமைய அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தாக்குதலுக்கு முன்னர் அது தொடர்பாக விடுத்த எச்சரிக்கை தொடர்பாக முழுமையாக தெரிந்திருந்த நிலையில் அதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்களினால் கட்சி தலைமைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.lnw

No comments