இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையை படிப்படியாக மாற்றியமைத்து ஆக்பூர்வமான குடிமக்களை நாம் உருவாக்க முடியும் ஜனாதிபதி


இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையை படிப்படியாக மாற்றியமைத்து அதனை மாணவர்-மைய கல்வி முறைமையாக உருவாக்க வேண்டும். இதனூடாகவே, நாடு வேண்டி நிற்கின்ற - சவால்களை எதிர்கொண்டு வெற்றியடையக்கூடிய - ஆக்பூர்வமான குடிமக்களை நாம் உருவாக்க முடியும். தற்போது நாட்டில் பரீட்சை-மைய, ஆசிரியர்-மைய கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. வெறும் பரீட்சை-மைய கல்வி முறையானது - ஆரோக்கியமான சமூகத்தையும் எம்மிலிருந்து உருவாக்காது, நிலைபேறான பொருளாதாரச் செழிப்பையும் நாட்டில் ஏற்படுத்தாது.”


-இலங்கைப் பாடசாலை ஒன்றின் முலாவது ஏழு-மாடிகள்-கட்டிடத்தை, நேற்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் திறந்து வைத்து உரையாற்றிய பொழுது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு

No comments