ரணிலின் யானையையும், சஜித்தின் இதயத்தையும் தோற்கடித்து வருகை தரும் அன்னம்


அடுத்த பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட UNPயின் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் உடன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இரு கட்சிகளின் பத்து பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று  கூடி இரு கட்சிகளின் பிரதிநிதிகளும்  அன்னம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, புதிய கூட்டணியின் அடையாளமாக  இதய சின்னத்தை  சஜித் கட்சி தேர்ந்தெடுத்திருந்தது. இருப்பினும் ரணில் தரப்பு அந்த சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சமீபத்தில், ரணில் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் சஜித்தின் தேர்தல் சின்னத்தை பகிரங்கமாக விமர்சித்தனர்,கூட்டணியின் சின்னம் யானையாக இருக்க வேண்டும் என்று கூறினர்.

இருப்பினும், கலந்துரையாடலில்  சஜித் பிரிவு "அன்னம்"  சின்னத்தை  முன்மொழிந்ததாகவும், அதற்கு ரணில் தரப்பு  ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணியின் மற்ற தரப்பினருக்கு அறிவித்து அவர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு UNP முடிவு செய்துள்ளது.lnw

No comments