காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டினில் மாபெரும் இரத்ததான முகாம்.


ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்

இலங்கைத் திருநாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டினில் 
காத்தான்குடி தள வைத்தியசாலையில்  (04.02.2020 செவ்வாய்)  இடம்பெற்ற மாபெரும் இரத்தான முகாம் போரத்தின் தலைவர் MACM. ஜெலீஸ் JP தலைமையில் இடம் பெற்றது.


ஆண்கள், பெண்கள் என சுமார் 62 கொடையாளர்கள் தங்கள் உதிரங்களை கொடுத்து நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


மேற்படி நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். நஸீம்ஹிறா பௌண்டேஷன் செயாலாளர் நாயகம்          அஷ்செய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ்        (மதனி) சிரேஷ்ட ஊடகவியலாளர் SM. முஸ்தபா (பலாஹி) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம். ஜாபிர், இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் டாக்டர் S.பிரபா சங்கர், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களின் பங்களிப்புடன் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் உப தலைவர் பாஸுல் பர்ஹான், செயலாளர் எம்.ஐ.எம்.அன்வர் பொருளாளர் என்.எம் பாயிஸ், உப செயலாளர் எம்.ஐ ஹிஸாம், உட்பட அதன் உறுப்பினர்கள் பலரின் பங்கு பற்றுதலுடன் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.No comments