ஸ்ரீரீலங்கா சுதந்திரக் கட்சியும் காத்தான்குடி அரசியல் வகிபாகமும் ஒரு பார்வை.

காத்தான்குடி அரசியல் UNP அரசியலுடன் இணைத்து செயற்ட்ட வரலாற்றுப் பதிவுகள் 1972ம் ஆண்டு ஆட்சியமைத்த SLFPயின் அரசாங்கத்தில்  செல்வாக்கு  மிக்க அமைச்சராக இருந்த DR.பதியுதீன் மஃமூத் அவர்கள் கல்வி அறிவாற்றலும் தூர தரிசனமிக்க செயற்பாடும் காத்தான்குடி அரசியலில்  தலைமை  வகித்த அஷ்ஷஹீத் அகமது லெப்பை சார்ந்த தலைமைகளுக்கு DR.பதியுதீன் அவர்களின் நகர்வுகள் சரியாக இருந்ததால் அமைச்சரோடு இணைந்து வேலை செய்வதற்கு காத்தான்குடி தலைமைகள் முடிவு செய்தனர்.
ஏறாவூர் தலைமைகள் அந்தக் காலகட்டத்தில் அமைச்சரோடு இணைந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இன்றைய காலத்தைப் போன்று அமைச்சர்கள் மலிந்து வந்து போற காலம் அல்ல அந்தக் காலம் ஆண்டுக்கு ஒரு அமைச்சர் வந்து போவதும் அரிது அமைச்சர் ஊருக்கு வருவது என்றால் அன்று  ஒரு பெருநாள் ஊர் மக்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அஷ்ஷஹீத் அகமது லெப்பை அவர்கள் சார்ந்த ஊர் தலைமைகள் அரசியலை மக்கள் மயப்படுத்தியிருந்தனர். 

DR.பதியுதீன் மஃமூத் அவர்கள் அம்பாரை மாவட்டத்தில் வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டு காத்தான்குடி வழியாக செல்லும் பெழுது ஊர் சார்பாக வரவேற்புக் கொடுப்பதற்கு  பிரதான வீதியில் மாலையோடு ஆயத்நிலையில் நிற்கின்றனர்.

DR.பதி வந்த கார் மெது மெதுவாக நேருங்கி வருகிறது அஷ்ஷஹீத் அவர்கள் மாலையோடு காரை நெருங்கும் பொழுது அமைச்சர் இறங்கி வராது கார் புறப்படுகிறது.
இந்த அவமதிப்பை காத்தான்குடி தலைமைகள் எதிர்பார்க்கவில்லை. 


கையில் இருந்த மாலையை  காலால் மிதித்து அவமதிப்புக்கு காட்டிய அந்த துணிகரச் சம்பவம் அடுத்த நாள் நாட்டில் தலைப்புச் செய்தியாக மாறியது DR.பதியுதீன் தான்  பிழையாக வழி நடாத்தப் பட்டு விட்டோம் எனக் கவலைப் பட்டார். அதன் பின்னர் அஷ்ஷஹீத் அகமது லெப்பை அவர்களோடு  ஒரு இறுக்கமாக உறவு ஏற்படலாயிற்று.

DR.பதிக்கு இந்த நாட்டில் எந்த தலைவருக்கும் கொடுக்காத மிகப் பெரிய கௌரவம் காத்தான்குடி மண் கொடுத்தது. DR.பதியை நாணயங்களால் நிறுத்து அதனை அவருக்கு வழங்கியதுடன் "காயிதே மில்லத்" என்ற பட்டமும் வழங்கி இந்த நாட்டுக்கு பொருத்தமான சமூகத் தலைவன் என இந்த மண் அடையாளப் படுத்தியது.


DR.பதியுதீன் அவர்களது அரசியல் அதிகாரமும் காத்தான்குடி தலைமைகளின் செயற்பாடும் இணைந்து செயற்பட்டதால் எமது மண் சகல துறைகளிலும் மாற்றம்  கண்டது. 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் DR பதியும் SLFPயும் தோல்வி அடையும் வரை நீடித்தது.

1977ம் ஆண்டு ஆட்சியமைத்த UNP அரசாங்கத்தில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா குடியுரிமை பறிகப் பட்டிருந்த போதும் கூட அவரை இந்த மண்ணுக்கு அழைத்து வந்து மிகப் பிரமாணடமான் வரவேற்புக் கொடுத்து கௌரவித்தது. காத்தான்குடி SLFP யுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவினை இது சிறப்பாக அடையாளப் படுத்துகிறது.

1983ம் ஆண்டுக்கு பின்னர் புலி பயங்கரவாதப் பிரச்சினை SLMC யின் தோற்றம் அஷ்ஷஹீத் அகமது லெவ்வையின் மறைவு  போன்ற காரணங்களினால் கட்சியின் செயற்பாடுகள் தேக்க நிலையில் வைக்கப் பட்டது. இக்காலப்பகுதியில் சட்டத்தரணி அப்துல் ஜவாது சேர்,அலிஸாஹிர்மௌனாMP,ULஅப்துல்மஜீது, PMMஹனீஸ்,MKM அலியார் காக்கா  போன்றோர் இதன் செயற்பாட்டாளராக இருந்தார்கள் .


1993/94ம் ஆண்டு காலப் பகுதியில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவர்களது  வருகையுடன் SLFP எழுச்சி பெறுகிறது. துடிப்பு மிக்க இளைஞன் மர்சூக்அகமது லெப்பை அதன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமனம்  பெறுகிறார்கள்.

தொடரும்-

SLA.கபூர்.B.com
(மட்டக்களப்பு மாவட்ட SLFP முன்னால் மத்தியகுழுச் செயலாளர்)

-

No comments