தெற்கு அதிவேக மாத்தறை - ஹம்பாந்தோட்டை வீதி இன்று திறப்பு

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்படும் அதிவேக வீதியாகும்.

மாத்தறை - ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.lnw

No comments