மஹிந்த - பெசில் - மைத்திரிக்கு இடையில் கலந்துரையாடல்

ஸ்ரீலசுக தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்த பொது தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் இருதரப்பும் இணைந்து உருவாகும் கூட்டணி தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர்  கலந்துக்கொள்ளவுள்ளனர்

No comments