புதிய காத்தான்குடி அல் இக்பால் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு பிரதம அதிதியாக முன்னால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்.

மட்டக்களப்பு மத்தி வலயம் மட்/அல் இக்பால் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி (20.02.2020 வியாழன்) பாடசாலையின் அதிபர் VM.கனீபா BA தலைமயில் இடம்பெற்றது.சபா, மர்வா என இரு இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் யாவும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். இதன் போது அதிகூடிய புள்ளிகளைப் பெற்று (98) சபா இல்லம் முதலாமிடத்தினை தட்டிக் கொண்டது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் PhD கலந்து கொண்டதுடன் அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம் SLEAS,
மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் CM.ஆதம் லெப்பை A/0, முன்னாள் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் M.றுஸ்வின் (LLB),பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணங்களும், சாண்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments