காத்தான்குடி அந்நாசர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

ஊடகவியலாளர்
            ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி மட்/ அந்நாசர் வித்தியாலயத்தின் 2020 வருடாந்த
இல்ல விளையாட்டுப் போட்டி
வித்தியாலயத்தின் அதிபர் HA. றஸாக் தலைமையில் (14.02.2020 வெள்ளி) காத்தான்குடி ஹிஸ்புல்லா பொது மைதானத்தில்  
இடம் பெற்றன.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியானது சபா, மர்வா, ஹிறா என மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன.நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.SMMS.உமர் மெளலானா SLEAS, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் AGM. ஹக்கீம் SLEAS, உதவி கல்வி பணிப்பாளர் MLM.முதர்ரிஸ் SLEAS காத்தான்குடி முன்னாள் பிரதேச கல்விப் பணிப்பாளர் தேசமானிய அல்ஹாஜ் MACM. பதுர்தீன் JP, SDC செயலாளர் AGM.றிஸ்வி உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கொண்டனர்.

மாணவர்களின் உடற்பயிற்ச்சி கண் காட்சி சிறப்பாக அமைந்திருந்ததுடன் மாணவர்கள் போட்டி நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.No comments