கூட்டணியில் இவர்கள் இணைவதாயின் சின்னத்தை மாற்ற முடியும் - ரணில்

புதிய கூட்டணிக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இணைவதாயின் யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ரணில் -சஜித் கலந்துரையாடலுக்கு முன்பு தனக்கு நெருக்கமானவர்களிடம் இது குறித்து அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புதிய கூட்டணி, ஒரு பரந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அரசியல் முன்னணியாக ஸ்ரீலசுக, ஜேவிபியுடன் இணைந்து உருவாக்கப்படுமாயினும் கட்டாயமாக வேறு சின்னத்தை பயன்படுத்த வேண்டிவரும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் அவ்வாறு இல்லை எனின் யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்து அர்த்தமில்லை என கூறியுள்ளார்.

விசேடமாக இந்த கூட்டணியிற்குள் இருப்பது 2015ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிட்ட கட்சியென்றால் புதிய சின்னத்தின் தேவை என்ன என கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டணிக்காக இதய சின்னத்தை பயன்படுத்த பாட்டளி சம்பிக்க ரணவக்க முன்மொழிந்திருந்த நிலையில் அந்த சின்னம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிற்குள் சில உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. இந்த அடையாளம் இளைஞர்களிடையே சில பிரபலமான நிலையை  பெறக்கூடும், ஆனால் இது வாக்குச்சீட்டில் எவ்வளவு தீவிரமானது? இது சமூகத்தில் எந்த அளவிற்கு கேலி செய்யப்படலாம் என்பது குறித்தும் அவர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.lnw


No comments