வேடத்தனம் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும்

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகிவற்றின் அனுசரணையுடன் கொடகே கையெழுத்துப் போட்டியில் விருது பெற்ற மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களின் வேடத்தனம் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும் 15.02.2020 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெறும்.கௌரவ அதிதிகளாக : தேசபந்து சிரிசுமன கொடகே, திருமதி நந்தா கொடகே ஆகியோர் கலந்து கொள்வார்கள்,

நூலின் முதற்பிரதியை பெறுநர்: இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்றுகொள்வார்.


மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களுக்கான அஞ்சலி உரைகளைப் பேராசிரியர் செ.யோகராஜா, திரு.வவுனியர் இரா உதயணன், திரு.பி.பி.தேவராஜ், திரு.அந்தனி ஜீவா, டாக்டர்
தி.ஞானசேகரன், திரு.தம்பு சிவசுப்பிரமணியம், திரு.தெளிவத்தை ஜோசப், திரு.அல்அசூமத், திருமதி.பிரமீளா பிரதீபன், டாக்டர் ஜின்னாஹ் சரீப்புத்தீன், திரு.மு.சிவலிங்கம், திரு.கே.பொன்னுத்துரை, திரு.ஆ.செல்வேந்திரன் திரு.எம்.வாமதேவன் திரு.மேமன்கவி ஆகியோர் நிகழ்த்துவார்கள், ரூபா 650.00 பெறுதியான நூல் விழாவில் ரூபா 500.00 வழங்கப்படும்.

நன்றியுரையை மல்லிகை சி. குமார் அவர்களின் குடும்ப அங்கத்தினர் வழங்குவார்கள்.


No comments