நாட்டின் 72 வது சுதந்திர தினம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி காரியாலயத்தில் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.


எமது நாட்டின் 72 வது சுதந்திர தினம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி காரியாலயத்தில் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

காலை 8 மணிக்கு தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்,பிரதித்தவிசாளர், தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் வெளி பிரதேசங்களில் உள்ள ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. எனவே இந்நிகழ்விற்கு எமது ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்னுடன் அழைக்கின்றோம்.

NFGG
Kattankudy

No comments