சிறப்பாக இடம் பெற்ற கர்பலா அல்மனார் பாடசாலையின் சிறுவர் விளையாட்டுப் போட்டி 2020.

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்.

காத்தான்குடி கர்பலா அல்மனார் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டுப் போட்டி
(07.02.2020 வெள்ளி)
வித்தியாலயத்தின் புதிய அதிபர் NMM. ஜெளபர் BA தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றன.

மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் இப்பாடசாலையில்
இடம் பெற்ற இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மாணவர்கள், பொற்றோர்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதனை காண முடிந்து.

மேற்படி நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் AGM. ஹக்கீம், மட்/மத்தி வலயக் கல்வி நிருவாக உத்தியோகஸ்தர் CM. ஆதம்லெப்பை, MLM.முதர்ரிஸ் ADE, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் RM.றுஸ்வின் LLB, மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான MIM. நஸீம் JP, ASM.அன்சார் JP உட்பட கல்வி அதிகாரிகள், பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.No comments