தொலைபேசி உரையாடல் பதிவு செய்வதை தடை செய்ய முடியாது - ITSSL

தனியார் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் (App) பயன்பாடுகளை தடை செய்ய வேண்டும் என சில தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களினாலும் அரசாங்கத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் தொடர்பாக வருத்தப்படுவதாகவும், அத்தகைய தடையை அமல்படுத்த அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் ITSSL தெரிவித்துள்ளது.

சிலர் தகவல் தொழில்நுட்பத்தை அறியாததால் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் சமூகத்தின் மிகவும் படித்த மற்றும் புத்திசாலித்தனமான மக்கள் கூட இதுபோன்ற கோரிக்கைகளை வைக்க ஆசைப்படுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினை என சங்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்பம்  பற்றி எந்த அறிவும் இல்லாத பொது மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் ஆபத்தானது என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக்கூடிய App பயன்பாட்டை தடை செய்யுமாறு பேராசிரியர் கொடப்பிடியே ராகுல தேரர் அண்மையில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

No comments