வேட்புமனு வழங்கப்படாவிட்டால் தேரர்கள் வேறு முன்னணியில் களமிறங்கும் வாய்ப்பு

பொது தேர்தலில் தேரர்களுக்காக அல்லது வேறு மத தலைவர்களுக்காகவோ வேட்புமனுக்களை வழங்கக்கூடாது என தற்போது அதிகம் பேசக்கூடிய விடயமாக உள்ளது. இது தொடர்பாக பிரதானமான தேரர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இவ்வளவு காலம் பாராளுமன்றத்திற்கு தகுதி பெற்ற தேரர்கள் சிங்கள இனத்திற்கு அல்லது பௌத்த மதத்திற்கு எவ்வித சேவையும் செய்யாமல் தோல்வியை கண்டது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எவ்வாறாயினும் தற்போதுவரை தேரர்கள் சிலர் வேட்புமனுக்களுக்காக காத்திருக்கின்றனர்.

அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் கட்சியிலிருந்து வேட்பு மனு வழங்கப்படாவிட்டால், அவர்கள் பொதுத் தேர்தலில் வேறு முன்னணியின் மூலம் போட்டியிடத் தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள விகாரை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் இந்த ஆண்டு வேட்புமனுக்காக காத்திருக்கும் பல பௌத்த பிக்குகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. எது எப்படி போ என்ன நடக்கப் போகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments