இலங்கையின் முதலாவது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பராமரிப்பு மையத்தை நிகழ்வுபூர்வமாக திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ.


அரச மற்றும் தனியார் துறையின் கூட்டுப் பங்களிப்புடன் இந்த “மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அயதி தேசிய மையம் நிறுவப்பட்டுள்ளது.


இயலாமை ஒரு தேசிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து குழந்தைகளில் ஒருவர் (20%) உடல் அல்லது மனநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


குழந்தைகளில் ஏற்படும் இந்த பாதிப்பினை முன்கூட்டியே கண்டறிந்து உரிய தீர்வுகளை வழங்குவதன் மூலம் - அவர்களை ஆக்கத்திறன் மிக்கவர்களாக உருவாக்கி மிகவும் திறம்பட சமூகமயமாக்க முடியும். அயதி மையத்தின் நோக்கம் அதுவே.உருவாக்கி முடிக்கப்பட்டுள்ள இந்த “அயதி” மையத்தின் மொத்தப் பெறுமதி 55 கோடி ரூபாவாகும்.


களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இதற்கான நிலம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க முன்வந்திருந்தது.


ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களும், ரோஷன் விஜெராம குடும்ப அறக்கட்டளை அமைப்பும் வழங்கிய நிதி உதவியில்,

இலங்கை ராணுவத்தின் கட்டுமானப் பிரிவினர், ஒரு வருட காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை இலவசமாக மேற்கொண்டு முடித்துள்ளனர்.

செவிப்புலன் கருவிகளை ரோட்டரி கழகம் வழங்குகியது.


வாரத்தின் ஒவ்வொரு நாளும் இலவச மருத்துவ சேவை இங்கு நடத்தப்படும். களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயர் தகுதி வாய்ந்த தொழில்முறை நிபுணர்களால் இந்த பணி ஆற்றப்படும்.பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, செவிப் புலன் சிகிச்சை, உடற் செயற்பாட்டு சிகிச்சை, குடும்ப உறவு ஆற்றுப்படுத்தல் போன்ற பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கும்.


ஓர் அதிநவீன செவிப்புலன் மையம், ஓர் உடலியல் பயிற்சி மையம் மற்றும் ஓர் ஆராய்ச்சி மற்றும் உளவியல் மேம்பாட்டு பிரிவு ஆகியவற்றை இந்த நிறுவனம் 
உள்ளடக்கியுள்ளது.

சமஸ்கிருதத்தில் “அயதி” என்றால் "நம்பிக்கை" என்று பொருளாகும்.


No comments