மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காததான்குடி பிரதேச செயலகத்துக்கு விஜயம்,

எம்.எஸ்.எம்.நூர்தீன்.

அரச அதிபரை காத்தான்குடி செயலக உத்தியோகத்தர்கள் கொளரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் இன்று (23.01.2020) வியாழக்கிழமை காத்;தான்குடி பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்து காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களை சந்தித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.றியாஸ், கணக்காளர் செல்வி சித்திரா உட்பட நிருவாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.


இதன் போது காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.


No comments