பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு - முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர், அரச துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டத்தினை நோக்கமாகக் கொண்ட -

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் எண்ணக்கருவின் கீழ் இந்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி பதில்கடமை இராணுவ தளபதியாக 2007ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் இந்தோனேசியாவிற்கான இலங்கை தூதுவராக அவர் 06 வருடங்கள் சேவையாற்றியுள்ளார். 

சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் ஆரம்பகால செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராகவும் மல்வராச்சி பணியாற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments