ஊடகத்துறையின் புத்திஜீவித்துவ ஆளுமை ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மறைவு பெரும் இழப்பாகும். ; காத்தான்குடி மீடியா போரம். அனுதாபம்
திங்கட்கிழமை இரவு  சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மரணச் செய்தி தாங்கவொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தியது.

இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைவரினாலும் இரசிக்கப்பட்ட அற்புதமான குரல்வளத்தினைக் கொண்டிருந்த ஊடகத்துறையின் புத்திஜீவித்துவ ஆளுமையான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் கல்விச் சமூகத்தைச்சார்ந்திருந்ததால் மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு வழிகாட்டுவதில் அயராது உழைத்தவராவார்.

புத்திஜீவித்துவப் பாதையில் பயணித்த அன்னாரின் இழப்பு தமிழ் ஊடகப்பரப்பில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்புக்குரிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கும் காத்தான்குடி மண்ணுக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது காத்தான்குடியில் பல இளைஞர்கள் ஊடகத்துறை மற்றும் அறிவிப்பு துறையில் சாதிப்பதற்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்.

அதோடு காத்தான்குடி சமூகம் இன்னல்களை எதிர்நோக்கிய போது தலைநகரில் எமக்காக குரல் கொடுத்த ஒரு மனிதர் என்ற வகையில் காத்தான்குடி சமூகம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களை மறக்காது என்றும் நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளது..

அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் உயரிய ஒழுக்கப் பண்பினைக் கொண்டிருந்த முன்னுதாரணமிக்க ஊடக ஆளுமையாக விளங்கினார்.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது உறவுகள் மற்றும் உடன்பிறப்புக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இப்பிரிவைத் தாங்கும் மன வலிமையை எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் பாவங்களை மன்னித்து, மண்ணறையினைச் சுவர்க்கத்தின் பூங்சோலையாக மாற்றி உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனம் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம்.

காத்தான்குடி மீடியா போரம்..


No comments