காலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்

மௌலவி ஏ.பீ.எம்.நிஹார்
காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து பொறியியலாளர்களாள சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் ஆகியோர்கள் ஒன்று பட வேண்டியதன் அவசியம் இன்று பலராலும் பேசப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளன என சமூக செயற்பாட்டாளரும், சமாதான நீதவானுமாகிய "கீர்த்தி ஸ்ரீ" அல்ஹாஜ் ஏ.பீ.எம் நிஹார் மௌலவி அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுபீட்சமான நாடு,பசுமையான நகரம், திட்டமிட்ட அபிவிருத்தி ஊழல் மோசடியற்ற, படித்தவர்களைக் கொண்ட ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரம், நல்லாட்சி எமது மண்ணில் மலர வேண்டுமாயின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இருந்தாவது திறந்த மனதுடன், பரஸ்பரம் விட்டுக்கொடுப்புடன், எமது மக்களின்,மண்ணின் எதிர்கால நலன் கருதி, சாதகமான பேச்சுவார்த்தைகளின் ஊடாக மேற்படி இருவரும் ஒன்றாக இனைந்து அரசியலில் பயனிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊருக்கு ஒரு எம்பி என்ற கோஷம் இன்று வலுப்பெற்று வருகின்ற நிலையில் அதனை நாம் ஏற்றுக் கொண்டவர்களாக அந்த தம்பி யார்.....? என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம். அதே நேரம் நாம் அளிக்கின்ற வாக்கினுடாக அடுத்த கிராம வேட்பாளரை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு அழகு பார்க்கின்ற சம்பிரதாயத்துக்கு இம்முறை சாவுமணி அடிக்க வேண்டும். இல்லையேல் எதிர்க் கட்சியானாலும் நம்மவன் நமதுாருக்காரன் நமக்கு மேல் என்பதே எனது நிலைப்பாடாகும்
ஆட்சி, அதிகாரம் என்பது யாருக்கும் சொந்தமானதுமல்ல.. அது நிரந்தரமானதுமல்ல........
எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு புதிய அரசியல் மாற்றம் 2020 காத்தான்குடி மண்ணிலிருந்து உருவாக வேண்டும் என்பதோடு அதற்காக சிப்லி பாறுாக் , அப்துர் றஹ்மான் ஆகியோர் மனம் திறந்த பேச வேண்டும். இந்த பேச்சுவார்த்தையானது இடைத்தரகர்கள் இல்லாது எங்கே......... எப்படி........... எப்போது....... யார் யாரைக் கொண்டு ஆரம்பிப்பது என இருவரினதும் உயர்மட்ட தலைமைகள், உறுப்பினர்களின் மசூராவின் அடிப்படையிலேயே அது அமைய வேண்டும் என்பதே எனதும், என்னைப் போன்ற பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
என் அன்புக்குரிய உறவுகளே....
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான எமது மண் எதிர் கொண்டுள்ள சவால்கள், எமது மண்ணின்,மக்களின் எதிர்காலம் தொடர்பில் நாம் நிதானமாகவும், கவனமாகவும் அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். பேரினவாதிகள் முஸ்லிம் தலைமைகளை இன்று இனவாதக் கண்கொண்டு பார்க்கின்ற இன்றைய நிலையில் நாம் ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தின் ஊடாக எமது மக்களை, எமது நகரத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய அவசியமும், தேவைப்பாடும் உள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது. எனவே நாம் இலக்கினை அடைந்து கொள்ள வேண்டுமாயின் தனித்து நின்று, பிரிந்து கொண்டு வெற்றி பெற முடியாது.....? எனவே ஒன்றுபடுவோம், ஒன்றாய்ப் பயணிப்போம்,
எதிர்வரும் பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வியூகங்களை இன்றிலிருந்தே வகுப்போம். இந்த இலக்கை அடைந்து கொள்ள எம்மிடம் படைபலம், பண பலம் இல்லையென்ற போதிலும் அதனைவிட ஒருபடி மேலாக மக்கள் பலம் எம்மிடம் உண்டு. எனவே நாம்....கண்ணியமிக்க உலமாக்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், பெண்கள் அமைப்புகள், பள்ளி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரினதும் ஆலோசனைகளின் படியும், ஆசீர்வாதத்துடனும் இந்த பயணத்தை தொடர வோண்டும் என்றும் மௌலவி ஏ.பீ.எம்.நிஹார் வேண்டிக் கொண்டுள்ளார்.

No comments