ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்புல்லாஹ விஜயம்!
ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ‎எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்   (2019.10.18) ‎வெள்ளிக்கிழமை
மட்டக்களப்பு, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்தார்.


ஏறாவூர் ஓட்டுப் பள்ளி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முதலில் விஜயம் செய்த ‎அவர், அங்கு ஜும்ஆ தொழுகைக்கு பின் பொது மக்களுடன் ‎கலந்துரையாடினார். ‎


பின்னர், தனது நிதியொதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 400 ‎வருடங்கள் பழமை வாய்ந்த ஏறாவூர், ஆத்தங்கரை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ‎விஜயம் செய்ததுடன், அங்கு தனது நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு ‎வருகின்ற பள்ளிவாசல் மதில் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார். ‎


அதனைத் தொடர்ந்து ஏறாவூர் ஹதீஜா பள்ளிவாசல் நிர்வாகத்தின் ‎வேண்டுகோளுக்கு அமைய அங்கு விஜயம் செய்த ஹிஸ்புல்லாஹ், ‎பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.


அதேபோன்று, தனது நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டு வரும் அல்- அக்ஸா வடிவிலான ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்து அதன் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.