சட்டத்தரணி அஸ்வரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான புலமைப் பரிசில் உதவி திட்டம் ஆரம்பித்து வைப்பு ..(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம்.அஸ்வர் (LLM) வறிய குடும்பங்களைச் சேர்ந்த  மாணவர்களின் கல்விக்காக  அவர்களுக்கான மாதார்ந்த புலமைப்பரிசில்  கொடுப்பணவை வழங்கும் திட்டத்தினை  திங்கட்கிழமை(14)  ஆரம்பித்து வைத்தார்.
இத் திட்டத்தின் கீழ்  காத்தான்குடி அல் அமீன்  வித்தியாலயத்திலுள்ள 20 மாணவிகளுக்கு இப்புலமைப் பரிசில் கொடுப்பணவு  வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் எம்.எம்.கலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வைத்து சட்டத்தரணி எம்.ஐ.எம்.அஸ்வர் (LLM) இப் புலமைப் பரிசில் கொடுப்பணவுப் பத்திரத்தை வழங்கி வைத்தார்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் இம் மாணவர்களுக்கு கொடுப்பணவுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..


No comments