நிந்தவூர் அல் – அஷ்ரக் பாடசாலைக்கு கபடிபோட்டியில் இரண்டாமிடம்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 17 வயதுப்பிரிவு கபடி அணியினர் கடந்த நான்கு நாட்களாக அதாவது 11,12,13,14 ஆம் திகதிகளில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலை விளையாட்டு கபடி போட்டிகளில் 17 வயது ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

பொறுப்பாசிரியர் ஏ. ஹலீம் அஹமத்,  கபடி பயிற்றுவிப்பாளர்களான எஸ்.எம். இஸ்மத்,  எம்.ரீ.அஸ்லம் சஜாபாடசாலையின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக் குழு பொறுப்பான ஏனைய ஆசிரியர்களான எச்.எம். ஜமீன்பீ. நவரட்ணம்,  எம்.எஸ்.எம். சபீர்,  எம்.ஐ.எம். அஸ்மி ஏ.எம். அன்ஸார்,  பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர். முஹம்மது அஸ்மி ஆகியோர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் பொறுப்பான ஆசிரியர்களுக்கும் பிரதி,  உதவி அதிபர்கள்ஆசிரியர்கள்,  மாணவர்கள்,  கல்விசாரா ஊழியர்கள்,  பெற்றோர்கள் மற்றும் கல்முனை வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித்கல்முனை வலய உடற்கல்வி ஆலோசகர்,  ஐ.எல்.எம். இப்ராஹிம் மற்றும் பாடசாலையின் SDC,OBA  எல்லோருக்கும் பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல்கபூர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.  


No comments