ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் மினன் ஜூம்ஆ பள்ளிவாயல் திறந்து வைப்பு.(ஊடகப்பிரிவு) 

கிழக்கு மாகான முன்னால் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட காங்கயனோடை மினன் ஜூம்ஆப்பள்ளிவாயல் இன்று (05.10.2019 வெள்ளி) திறந்துவைப்பு.காங்கேயனோடை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஜூம்ஆப்பள்ளியான மினன் ஜூம்ஆப்பள்ளிவாயல் இன்று  வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதன் போது மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.றசீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்பங்கேற்று ஜூம்ஆ தொழுகையுடன் ஆரம்பித்துவைத்தார்.

இப்பள்ளிவாயல் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்டமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments