அரசியல்வாதிகள் மக்கள் மீது சுமத்திய சுமையை எவ்வாறு குறைப்பது?உங்களோடு சில நிமிடம்,,,,,,

“இன்று உலகில் வளர்ந்த நாடுகளை உருவாக்கிய பல தலைவர்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.
அத்தகைய தலைவர்கள் இல்லாமல் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
அதன்படி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படியாக, ஜனாதிபதியின் சலுகைகளை  குறைக்கவும், முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் சலுகைகளை மீளப்பெறவும் முடிவு  செய்துள்ளோம்.

அது மட்டுமல்லாமல், ஜனாதிபதிக்கு நாடு முழுவதும் அரண்மனைகள் உள்ளன. கொழும்பில் ஒரு அரண்மனை உள்ளது. நுவரெலியா, கண்டி, அனுராதபுரா, காங்கேசன்துறை  மற்றும் எம்பிலிப்பிட்டியா போன்ற இடங்களிலும் ஜனாதிபதி மாளிகைகள் உள்ளன. சில அரண்மனைகளில் ஜனாதிபதி ஒரு  இரவு  கூட  தங்குவது இல்லை . இருப்பினும், ஏழு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டி, 200,000 ஊழியர்களைக் கொண்டு, மக்களைக் காக்க ஏராளமான பொலிஸை விட்டுவிட்டு, மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே, நான் மக்களுக்கு உறுதியளிக்கிறேன், தீவைச் சுற்றியுள்ள அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் திறந்து அவற்றை கலாச்சார மையங்களாகவும், சுற்றுலா பங்களாக்களாகவும் மாற்றுவோம், அவை நாட்டிற்கு வருவாய் தரும் மையங்களாக மாறும். ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில்  90% க்கும் அதிகமான  நாங்கள் குறைத்து விடுவோம்.

“எம்.பி.க்களின் வீணான செலவுகளுக்கு என்ன ஆகும் என்று இப்போது நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள்.
அவற்றையும் குறைத்து விடுவோம் .

ஒரு உறுப்பினருக்கு இருக்க  இடமில்லை, வேறு வருமானம் இல்லை, அல்லது வாழ்க்கை முறைகள் இல்லை என்றால், சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து ஒரு சிறிய மாதாந்த  கட்டணம் செலுத்தப்படும்   
இதை விட வேறு எதையும்  பொதுமக்களால் அவர்களுக்கு வழங்க முடியாது.

எந்தவொரு குடிமகனும்  கட்சிகளுக்கு வாக்களிக்க நினைத்தால், இந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படுவார்களா என கேளுங்கள், 

இந்த கொள்கையை செயற்படுத்த நாங்கள் தயாராகி வருகிறோம்.
எனவே, நவம்பர் 18 ஆம் தேதி வெற்றியை எனக்கு தறுமாறு  மக்களை நான் அழைக்கிறேன்.
நாங்கள் இந்த மாற்றங்களை நாட்டு மக்கள் சார்பாக செய்கிறோம். ”

நம்பிக்கை தரும் நம்பகமான வேட்பாளர் அனுரகுமார திஸ நாயக்க.

No comments