ஆரயம்பதி பிரதேச சபை தவிசாளர் மகேந்திரலிங்கம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு.ஏ.எல்.டீன் பைரூஸ்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக மட்டக்களப்பு மண்முனைப் பற்று  பிரதேச சபை தவிசாளர் திரு - 
மகேந்திரலிங்கம் ஐக்கிய தேசிய கட்சியில் இன்று (16.10.2019 புதன்) இணைந்து கொண்டுள்ளார்.கொழும்பு சிறிகொத்தாவில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னால் இராஜாங்க அமைச்சர் உபாலி பியகமே, ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் லிங்க ராசா, பலபிட்டிய பிரதேச சபை முன்னால் உறுப்பினரும்,  ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி செயற்பாட்டாளரும், அகில இலங்கை சமாதான நீதவா னுமாகிய "கீர்த்திசிறி" MBM.அப்றாரி உப்பட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments