இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும்முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேசதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் 21.10.2019 திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பங்கேற்பாளர்களுக்கான ஆசனங்கள் 300 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வில், 16 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட முஸ்லிம் இளைஞர் மற்றும் யுவதிகள் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள முடியும்.

இந்நிகழ்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறும்.

1. இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு (பி.ப. 4:00 – பி.ப. 7:00)
(இதில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்)

2.  சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் இராப்போசனமும் (பி.ப. 8:00 – 9:30 மணி)
(தலைமைத்துவ செயலமர்வில் கலந்துரையாடப்பட்டு தயாரிக்கப்பட்ட
கேள்விகள் தொகுக்கப்பட்டு 2ஆம் அமர்வில் முன்வைக்கப்படும்)

நாடளாவிய ரீதியிலுள்ள இளைஞர்கள், யுவதிகள் இந்நிகழ்வில் பங்குபற்ற முடியும். இதற்காக கீழுள்ள இணைப்பில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து, 18.10.2019 வெள்ளிக்கிழமை பி.ப. 4 மணிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும். பதிவு செய்பவர்களின் தொலைபேசிக்கு ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கான பதிவிலக்கத்தை அறியத்தருவதுடன் உங்கள் ஆசனத்தை உறுதிப்படுத்துவார்கள்.

குறிப்பு: பங்கேற்பாளர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது.

பதிவுகளுக்கு: bit.ly/2MMCMfi 

மேலதிக விபரங்களுக்கு: 0112436752 (ஸக்கி)

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.