முஸ்லிம் காங்கிரசில் இணையும் முக்கிய புள்ளிகள்எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து புதிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் மூத்த போராளிகள், புதியவர்கள் என பலரும்  கட்சியில் இணைந்து கொள்கின்றனர்.


 
அந்த வகையில்
தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று (16.10.2019 புதன்) தாருஸ்ஸலாமில் வைத்து, கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்து கொண்டுள்ளனர்.


இவர்களுடன் சேர்ந்து தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் உயர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கட்சியில் இணைந்துகொண்டனர்.


இதன்போது இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments