முஸ்லிம் வேட்பாளர் போட்டியிட அவசியம் என்பது கோதாவை பாதுகாக்க அல்ல!நாட்டின் பெரும்பான்மையான மக்கள் யாரை ஆதரித்து வாக்களிப்பதோ அந்த வேட்பாளருக்கு கரம் கொடுக்கவேண்டிய தேவை இந்த முஸ்லிம் வேட்பாளரின் கையில் இருக்கும்..!? 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் விரும்பக்கூடிய ஒருவரை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கும் சமூகமாக முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது சிறந்தது என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஊடகங்களில் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.!

இதை சிலர் விமர்சிப்பது!
இன்னும் சிலர் வரவேற்பது!
பலருக்கு முஸ்லிம் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எவ்வாறு ஜனாதிபதியாக முடியும் என இதன் விளக்கம் தெரியாமல் திசை மாறிச்செல்வதையும் நாம் ஊடகங்களினூடாக பார்க்கிறோம்.!

ஒரு சிறிய உதாரணம்..!
அதாவது முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இம்முறை நாட்டின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மூவராக பிரிந்து போட்டியிடும்போது  பிரதான இரு கட்சிகளின் வாக்குகள் இம்முறை மூன்றாக பிரிக்கப்பட்டு மூன்று வேட்பாளர்களுக்கும் அதாவது மூன்று கட்சிகளுக்கும் நாட்டு மக்களின் வாக்குகள் வழங்கப்படும்!
இதில் அதிகமாக முஸ்லிம்கள் வாக்குகள் மூன்றாகப் பிரிக்கப்படும் என்பது 100% உண்மை!

1- சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளை நம்பி அதன் ஆதரவாளர்கள் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு எந்தத் தரப்புக்கு இருக்குமோ அவர்களுடன் 50% முஸ்லிம் வாக்குகள் செல்லும்!

2- எப்போதும்போல பிரதான கட்சிகள் இரண்டையும் ஆதரிக்கும் முஸ்லிம்கள் தமது வாக்குகளை இரு பிரதான கட்சிகளுக்கும் வழங்குவார்கள்.!

3- இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரத்தில் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் JVP இவர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் ஒருவரை அறிவித்துள்ளார்கள்!
இவர் பாராளுமன்றத்தில் நடுநிலையாக சக இன மக்களின் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுத்தாலும் இவர்கள் கட்சி அதிகாரத்தில் இருந்து இதுவரை குரல் கொடுத்தது கிடையாது!
இவர்கள் நாட்டின் இரு பிரதான கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பது இவர்களின் தொடர்ச்சியாக இருந்தது!
இம்முறை இவர்கள் தமது கட்சியின் வேட்பாளரை அறிவித்தது நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு அல்ல!
ஆனால் இவர்கள் அந்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என கூறலாம்!
இவர்கள் இம்முறை முஸ்லிம்களின் வாக்குகளை அதாவது 25% வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்கள்!
இதில் இளைஞர்கள் இம்முறை அதிகமாக இந்த மூன்றாம் தரத்தில் போட்டியிடும் கட்சியை ஆதரிப்பார்கள்!!

இங்கே முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டியது ஒன்றுமில்லை!
ஏனெனில் அன்று முஸ்லிம்கள் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்களோ!
அதாவது பிரிந்து நின்று!
அவ்வாறே இம்முறையும் வாக்களிப்பார்கள்!
சிறிய மாற்றம்!
அன்று இரு பிரிவு!
இன்று மூன்று பிரிவுகள்!

எனவேதான்
இப்போது ஹிஸ்புல்லாவின் கருத்துக்களை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க.!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான ACMC கட்சி இம்முறை இருக்கும் இடத்தில் இருந்துகொள்ளுமா!?
அல்லது புதிய தரப்பு ஒன்றுக்கு ஆதரவு வழங்குமா என்பதை பெரும்பாலான முஸ்லிம்கள் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் இதனைத்தான் எதிர்பார்ப்பது!!?

ஏன் !?
காரணம் !?

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களும் பெரும்பான்மையின மக்களில் பலரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடு முழுவதும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டம் செய்தனர்!!
அண்மையிலும் கூட.!!

அதில் அரசியல் தலையீடு என்பது ஒருபுறம் இருக்க..!

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது அமைச்சர் ரிஷாத் தலைமையிலான கட்சி இம்முறை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டாலும் அந்தக் கட்சிக்கு பிரச்சினை இருப்பது!!
அல்லது அமைச்சர் ரிஷாத் தலைமையிலான கட்சி வேறு வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த வேட்பாளருக்கும் பிரச்சினைகள் இருக்கிறது!!
அதாவது ரிஷாத் பதியுதீனின் ஆதரவு எந்தத் தரப்புக்கு கிடைக்குமோ அந்தத் தரப்பினர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையின மக்களின் பெரும்பாலான வாக்குகளை இழக்க நேரிடும்!!!
இதில் கிழக்கு தமிழர்களின் வாக்குகளும் கூட இணைந்துகொள்ளலாம்!!

எனவேதான் இம்முறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சி இரு பிரதான கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதைவிட கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய தீர்மானம்படி முஸ்லிம்களும் தமது அதிகாரங்களை தனித்து நின்று நாட்டின் தலைவரை தெரிவுசெய்யும் முயற்சியை ரிஷாத் ஹிஸ்புல்லாஹ் இவர்களுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் , பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்றிணைந்தால் முஸ்லிம்களின் ஒருதொகை வாக்குகளை அந்த முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக்கொள்ள முடியும்..!!?

இதற்கு ஹிஸ்புல்லாஹ் மாத்திரம் முயற்சித்தால் சாதிக்க முடியாத ஒன்று!
ஆனால் முஸ்லிம்களின் பிரதான கட்சியாக இருக்கும் அமைச்சர் ரிஷாத் தலைமையிலான குழுவின் ஒன்றிணைந்தால் நிச்சயம் இம்முறை நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கக்கூடி சமூகத்தில் முஸ்லிம்களும் ஒரு பகுதியினராக இருப்பார்கள்..!!!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஹிஸ்புல்லாஹ் இருவரும் மாத்திரமல்ல சில முஸ்லிம் தலைவர்களும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது இம்முறை இந்த ஜனாதிபதி தெரிவில் மாத்திரமல்ல இனிவரும் காலங்களில் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நினைத்தாலும் நாட்டின் தலைவரை தெரிவு செய்யலாம் என்பதை பெரும்பான்மையின மக்களுக்கும் பிரதான கட்சிகளுக்கும் காண்பிக்கமுடியும்.!!!

No comments