ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை முன்னால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்(ஊடகப்பிரிவு) 

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் இன்னும் முடிவில்லை என கிழக்கு மாகாண முன்னால் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.


காங்கேயனோடை அல்-அக்ஸா மைதான வீதி மற்றும் சுற்றுமதில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு போதே இவ்வாறு தெரிவித்தார்


காங்கேயனோடை பகுதியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசு  நிதியொதுக்கீட்டில் அல்- அக்ஸா மைதான வீதி மற்றும் அம்மைதான சுற்றுமதில் ஆகியன அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு 07.09.2019 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


சுமார் 20 இலட்சம் செலவில்  "கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தித்" திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இவ் அபிவிருத்திகளை கையளிக்கும் நிகழ்வு
மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.றசீம் தலைமையில் இடம்பெற்றது.வைபவத்தில் *கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்பித்தார்.வைபவத்தில் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.


No comments