இளைஞர்களை பிளையாக வழி நடாத்தும் எத்தனையோ அரசியல்வாதிகள் திறமையான வீரர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் பொறியியலாளர் சிப்லி பாறூக்


எம்.ரீ. ஹைதர் அலி

நாட்டில் உள்ள சிறிய கிராமங்களில் உருவாகின்ற எத்தனையோ இளம் வீரர்கள் தமது திறமைகளை அவரவர் பிரதேச மட்டத்தில் வெளிக்காட்டினாலும் தேசிய ரீதியாக அவர்கள் மிளிர்வதற்கு தடையாக இருப்பது அவர்களது வறுமையும் தகுதியான வேலைவாய்ப்புக்கள் அரசாங்க ஊக்குவிப்புக்கள் இல்லாமலிருப்பதே காரணமாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.நேற்று (22.09.2019) தாருஸ்ஸலாம் விளையாட்டுக்களகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு பூநொச்சிமுனை தாறுஸ்ஸலாம் மைதானத்தில் இடம்பெற்ற மூன்று நாள் கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கலந்துகொண்டு பரிசில்கள் வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர், தமது கட்சிக்கு வருடக் கணக்கில் தொண்டு செய்தால் வேலைவாய்ப்புத் தருவோம் என ஏமாற்று வார்த்தைகளாள் இளைஞர்களை பிளையாக வழி நடாத்தும் எத்தனையோ அரசியல்வாதிகள் இவ்வாறான திறமையான வீரர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். 

இதனால் தமது விளையாட்டுத்துறையை கைவிட்டுவிட்டு அனேகமான திறமைபடைத்த வீர்ரகள் நாட்கூலிகளாக வேலை செய்து தமக்கும் கிடைக்கும் உதிரியான நேரத்தில் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இப்படியான திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதுடன் ஓர் நிரந்தர வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

கடந்த ஆட்சி மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக ஆபாரகரமாக இருந்தது தற்போதய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியை ஒவ்வோர் வீடு வீடாக கிராமம் கிராமமாக கொண்டு சேர்த்த பெருமை இளைஞர்களையே சாரும். ஆக மொத்தத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் அனைத்தினங்களையும் அரவணைத்துக் கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் நல்ல ஓர் தலைவரை தெரிவு செய்வதில் இளைஞர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என மேலும் கூறினார். இச்சுற்றுப்போட்டியில் இறுதியாட்டத்தில் றிஸ்வி நகர் மொஹிதீன்ஸ் அணியினை எதிர்த்து றியல் பதுரியன்ஸ் அணி கழமிறங்கி றிஸ்வி நகர் மொஹிதீன்ஸ் அணியினர் 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டி தாருஸ்ஸலாம் வெற்றிக்கிண்ணத்தை சுபீகரித்துக் கொண்டது.

இப்போட்டியின் கௌரவ அதிதிகளாக பூனொச்சிமுனை இக்றா பாடசாலை அதிபர் அப்துர்ரசூல், மற்றும் ஹிழுறியா பள்ளிவாயல் தலைவர் அபுள் ஹசன், தொழிலதிபர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments