காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்(எம்.எச்.எம். அன்வர்)

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று 2.9.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழுத்தலைவர் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

தற்போது நடந்துகொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

மேற்படி கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதய சிரீதர்,உதவித்திட்டப்பணிப்பாளர் நகர சபை செயலாளர், நகர சபை உறுப்பினர்கள், திணைக்களத்தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர்  கலந்துகொண்டதுடன் பிரதேசத்தின் தேவைகள், குறைபாடுகள்,நிறைவுற்ற விடயங்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பாக இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.முக்கிய விடயங்களாக

#போதைப்பொருள் பாவனை தடுத்தல்
#கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
#சுகாதாரப்பிரச்சினைகள்
#கல்வி அபிவிருத்தி
#ஊர் வீதிக்கான போக்குவரத்து பஸ் வசதி ஏற்படுத்தல் 
#மின்சார சபைக்கான நிரந்தர கட்டடம்
#குடி நீர் பிரச்சினை
#வீதிகளை அபிவிருத்தி செய்தலும்  துப்பரவு செய்து மேற்பார்வை செய்தலும்
#தெரு நாய்களை கட்டுப்படுத்தல் 
#வீடமைப்பு வசதி

போன்ற முக்கிய விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.


No comments