பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கால நீடிப்பு வழங்கப்பட்டு வேலைகள் மீள ஆரம்பிப்பு

எம்.ரீ. ஹைதர் அலி

புதிய காத்தான்குடி மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதிக்கான வடிகான்கள் அமைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீமிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக அமைச்சினூடாக 1 கோடி 88 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வடிகான் அமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

இருந்த போதிலும் வடிகான்கள் அமைக்கப்படும் இடத்திற்கு குறுக்கே பல மின்கம்பங்கள் காணப்பட்டதாலும் அதனை அகற்றுவதற்கான நிதி பற்றாக்குறை நிலவியதாலும் வடிகான் அமைப்பு பணிகள் தாமதமடைந்திருந்தது. 

இதனடிப்படையில் தொடர்ச்சியாக இவ்வொப்பந்தத்தை நிறைவு செய்யும் முயற்சியில் பல முன்னெடுப்புக்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் முன்னெடுத்திருந்தார்.

இதன்பலனாகவும் மற்றும் முடிவுறுத்தப்படாத வேலைத்திட்டங்களை உடனடியாக முடிவுறுத்தும்படி திறைசேரியால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைவாகவும் இவ்வேலையை முடிவுறுத்துவதற்கான கால நீடிப்பு ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தக்காரர் இவ்வேலைகளை மீள ஆரம்பித்துள்ளார்கள்.

No comments