காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்(ஏ.எல்.டீன் பைரூஸ்)

SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அலிஅக்பர் ( நெளபர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

காத்தான்குடி நகரசபைக்கு புதிய உறுப்பினர்களை அனுப்புவது சம்பந்தமான கூட்டம் கடந்த 06.09.2019 இரவு சிப்லி பாறூக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற  வட்டார வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போது  புதிய உறுப்பினர்களாக மர்சூக் அஹமட்லெப்பை மற்றும் MIM. ஜஹானி ஆகியோரை நியமிப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் தனது தனிப்பட்ட காரணங்களால் தற்போது நகரசபை உறுப்பினர் பதவியினை  பாரமெடுத்து தன்னால் பணியாற்ற முடியாதுள்ளதாகவும்  கட்சியினுடைய  எதிர்கால செயற்பாடுகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் நேரடியாகவும், எழுத்து மூலமும் சகோதரர் MIM. ஜஹானி தனக்கு 
அறிவித்துள்ளதாக சிப்லி பாறூக் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில் வேட்பாளர் ஜஹானியினுடைய பெயரை பிரதியீடு செய்வதற்காக நான்காம் வட்டார வேட்பாளர் அஹமது லெப்பை அலி அக்பர் (நௌபர்) அவர்கள் புதிய உறுப்பினரிற்காக பிரேரிக்கப்பட்டுள்ளார் என்றும் SLMC இன் மட்டக்களப்பு தொகுதி அமைப்பார் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

No comments