அதிபர் கஸ்ஸாலி அஷ்-ஷம்ஸ் எழுதிய ‘கையோடு கூட்டி வாங்க’ நூல் வெளியீடு(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அதிபரும் பிரபல கவிஞருமான பாணந்துறை தொட்டவத்தை கஸ்ஸாலி அஷ்-ஷம்ஸ் எழுதிய கையோடு கூட்டி வாங்க’ எனும் கவிதை தொகுப்பின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நீர் கொழும்புஅல் - ஹிலால் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில்நீர் கொழும்புபிகோ ஹொலிடேய்ஸ் (Figo Holidays) நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஜே.எம். றுஸ்தீன் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.

பெரியமுல்லை பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.எஸ்.எம். பரூத்முன்னாள் மேல் மாகாணசபை அங்கத்தவர்களான எம்.எஸ்.எம். ஸகாவுல்லாஎம்.ஷாபி ரஹீம்நீர் கொழும்பு பிரதிமேயர் எம்.ஏ.இஸட் பரீஸ்நீர்கொழும்பு மாநகர சபை அங்கத்தவர்களான எம்.டீ.எம். நஸ்மிஹார்எம்.ஓ.எம் இஹ்ஸான்எம்.எச்.எம். ஹாரிஸ்எம்.என்.எம். நஸ்மின்ரோஸ்தொழிலதிபர்களான எம். நளீர் மரிக்கார்எம்.எம்.எம். பர்ஹான் ஆகியோர் நிகழ்வில் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்விழாவில்இலக்கியவாதிகள்கல்விமான்கள்ஊடகப்பிரதானிகள்ஊர்ப்பிரமுகர்கள்ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவுக்கு நீர் கொழும்புஅல் - ஹிலால் மத்திய கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியன மிகுந்த ஓத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments