காத்தான்குடியைச் சேர்ந்த 96 பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்புநாடு பூராகவும் மனிதாபிமான உதவிகளை ஜாதி, மத, குல, பேதமின்றி    பல்வேறுபட்ட உதவிகளை சகலருக்கும் வழங்கி வரும்  ZAM ZAM பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டினில்  உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு  (2019/09/24  செவ்வாய் ) காத்தான்குடி சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் MCMA. சத்தார் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் ZAM ZAM பவுண்டேசன் நிறுவனத்தின் ஆலோசகர் முன்சித் முர்சித், ஸம்ஸம் நிறுவனத்தின் இளைஞர் விவகார பொறுப்பாளர் அஷ்ஷெய்க் உமர் யூசுப், வைத்திய கலாநிதி மல்காந்தி, சகோதரி திமிந்தி, சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ALM. ஸபீல், சட்டத்தரணி A. உவைஸ், மதியன்பன் மஜீட், பைசர் அமான், ஊடகவியலாளர்கள், பயனாளிகள் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.


மேலும் 5000.00 ரூபாய் பெறுமதியான
உலர் உணவு பொதிகள் 96 பயனாளிகளுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments